TODAY NEWS
Search

அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

,

பெங்களூரு : கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் மே 12ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு தொகுதி தேர்தல் அதிகாரிகள் முறைபடி தேர்தல் அறிவிப்பை இன்று வெளியிடுகிறார்கள். மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2013 மே 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மே 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் 122 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றதின் மூலம் பெரும்பான்மை பலம் பெற்றது. அதை தொடர்ந்து மே 13ம் தேதி முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். வரும் மே 29ம் தேதி மாநில அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. அரசியலமைப்பு சட்டப்படி புதிய அரசு கூட்டிய முதல் பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய தினத்தை அடிப்படையாக வைத்து 5 ஆண்டு ஆட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி சித்தராமையா தலைமையிலான ஆட்சியின் பதவி காலம் வரும் மே 28ம் தேதியுடன்  முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கான வசதியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.இந்நிலையில் டெல்லியில் கடந்த மாதம் 27ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத், கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதாகவும், தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முறைப்படி வரும் ஏப்ரல் 17ம் தேதி அறிவிப்பார்கள் எனவும், அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேரவை தேர்தலில் 2 கோடியே 52 லட்சத்து 5 ஆயிரத்து 820 ஆண், 2 கோடியே 44 லட்சத்து 71 ஆயிரத்து 979 பெண் மற்றும் 4 ஆயிரத்து 552 திருநங்கைகள் என மொத்தம் 4 கோடியே 96 லட்சத்து 82 ஆயிரத்து 351 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 56 ஆயிரத்து 966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. மேலும்  மாநிலத்தில் முதல் முறையாக மின்னணு வாக்கு இயந்திரத்துடன் விவிபேட் வசதி இத்தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் விதிமுறை இன்று (நேற்று) முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.இன்று வேட்புமனு தாக்கல்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அரசாணையாக வெளியிடுகிறார்கள். அதை அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் முன்மொழிந்து அறிவிப்பார்கள். காலை 11 முதல் பகல் 3 மணி வரை மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மனுதாக்கல் செய்ய ஏப்ரல் 24ம் தேதி கடைசி நாளாகும். பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் சார்பில் 218 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு–்ள்ளனர். பாஜ சார்பில் 154 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், மஜத சார்பில் 126, பகுஜன் சமாஜ் சார்பில் 20, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 19 உள்பட சிறிய கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர். 144 தடை உத்தரவுபெங்களூரு கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் மே.12ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வேட்பு மனுதாக்கல் நடைபெற இருக்கிறது.  இதையொட்டி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடங்களையொட்டி எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் தடுக்க மனுதாக்கல் செய்யும் அலுவலகத்தையொட்டி 100மீட்டர் தொலைவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டு, பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

,

Advertisement