ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை தாக்கல் செய்ய எடியூரப்பாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு :

,

புதுடெல்லி: எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி தெரிவித்துள்ளார். அதேபோல் ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதங்களை மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்ய எடியூரப்பாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு ஆதரவு கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எடியூரப்பாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஆனால் கர்நாடக முதல்வராக எடியூரப்பா 9 மணிக்கு பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

,

Advertisement