TODAY NEWS
Search

இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒன்றிரண்டு பலாத்கார சம்பவங்களை வைத்து கூப்பாடு போடக் கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து

,

லக்னோ: ‘‘இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நடக்கும் ஒன்றிரண்டு பலாத்கார சம்பவங்களை வைத்து கூப்பாடு போடக்கூடாது’’ என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப நாட்களாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாகி உள்ளன. சிறுமிகள் பலாத்கார சம்பவம் அதிகரித்ததால் நாடு முழுவதும் பல தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.   இந்நிலையில், இந்த பலாத்கார சம்பவங்கள் பற்றி உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வர், ‘‘பலாத்கார சம்பவங்கள் துரதிருஷ்டமானவை. சில நேரங்களில் இதை உங்களால் தடுத்த நிறுத்த முடியாது. அரசு துரிதமாக செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அது வெளிப்படையாக தெரிகிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் நடக்கும் ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து கூப்பாடு போடக் கூடாது. இது நியாயம் அல்ல. தேவையான கடும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது’’ என்று கூறினார். அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

,

Advertisement