TODAY NEWS
Search

இந்துக்கள் நலனுக்காக நாளை முதல் தொகாடியா காலவரையற்ற உண்ணாவிரதம்: மோடிக்கு எதிராக போர்க்கொடி

,

அகமதாபாத்: இந்துக்கள் நலனுக்காக நாளை முதல் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக விஸ்வ இந்து பரிஷத்தில் இருந்து விலகிய பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். விஸ்வ இந்து பரிஷத்தின் சர்வதேச தலைவராக பிரவீன் தொகாடியா இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த இப்பதவிக்கான தேர்தலில் தொகாடியாவின் வேட்பாளர் ராகவ் ரெட்டியை இமாச்சல பிரதேச ஆளுனர் வி.எஸ்.கோக்ஜி தோற்கடித்தார். தனது வேட்பாளர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, விஷ்வ இந்து பரிஷத்தில் இருந்து நேற்று முன்தினம் தொகாடியா விலகினார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக அவர் தாக்குதலை தொடங்கியுள்ளார்.இது தொடர்பாக தொகாடியா கூறுகையில், “இனி நான் விஷ்வ இந்து பரிஷத்தில் கிடையாது. இந்துக்களின் நலனுக்கான எனது பணியை தொடர்வேன். இந்துக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அகமதாபாத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறேன். கடந்த 4 ஆண்டுகளாக இந்த அரசால் நான் ஏமாற்றம் அடைந்தேன்” என்றார். பிரதமர் மோடியும், தொகாடியாவும் குஜராத்தில் இருந்து ஆர்எஸ்எஸ்  தொண்டர்களாக தங்கள் பயணத்தை தொடங்கினர். கடந்த மாதம் ராஜஸ்தான் போலீசார் தன்னை கடத்துவதற்காக வந்ததாகவும், என்கவுன்டர் மூலம் தன்னை கொன்று விடுவார்கள் என்று பயந்து விட்டதாகவும் தொகாடியா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்தாண்டு நடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இருந்து மத்திய அரசை தொகாடியா கடுமையாக விமர்சித்து வருகிறார்.

,

Advertisement