TODAY NEWS
Search
Dkn_Daily_News_June_2018__2651897668839

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து : இறுதி போட்டியில் இன்று இந்தியா – கென்யா மோதல்

மும்பை : கண்டங்களுக்கிடையேயான கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் இந்தியா – கென்யா அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை கால்பந்து அரங்கில் நடைபெற உள்ள பரபரப்பான இந்த போட்டியில், சுனில் செட்ரி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி விளையாடிய 3 லீக் ஆட்டத்திலும் கேப்டன் செட்ரி அபாரமாக விளையாடி கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீன தைபே அணிக்கு எதிராக அவர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த, இந்தியா அபாரமாக வென்றது. அடுத்து கென்ய அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டம் செட்ரியின் 100வது சர்வதேச போட்டியாக அமைந்தது. அதில் அவர் 2 கோல் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். நியூசிலாந்து அணிக்கு எதிராக முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. அந்த போட்டியிலும் செட்ரி கோல் அடித்திருந்தார்.இந்த நிலையில், கென்யாவுக்கு எதிரான இன்றைய பைனலில் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்க உள்ளது. கென்ய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், 4-0 என்ற கோல் கணக்கில் சீன தைபே அணியையும் வீழ்த்தியுள்ளதால், அந்த அணியை எளிதாக எடை போட முடியாது என்பதை இந்திய வீரர்கள் உணர்ந்துள்ளனர். செட்ரி, ஜெஜே, உதந்தா சிங், அனிருத் தாபா, பிரனாய் ஹால்டர் ஆகியோரது ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளன.

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து : இறுதி போட்டியில் இன்று இந்தியா – கென்யா மோதல்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=409956http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |10 Jun 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *