TODAY NEWS
Search

உபி.யில் கொடூரம் மருந்து வாங்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த டாக்டர் : கிளினிக்கில் 3 நாள் அடைத்து வைத்தார்

,

முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தில் 13 வயது சிறுமியை கிளினிக்கில் அடைத்து ைவத்து பலாத்காரம் செய்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் தனது 13 வயது மகளை மருந்து வாங்கி வருவதற்காக அவரது தந்தை  அனுப்பினார். அப்போது, சிறுமிக்கு மருத்துவர் சோனு வர்மா மயக்க மருந்து கொடுத்து 3 நாட்கள் தனது கிளினிக்கில் அடைத்து பலாத்காரம் செய்துள்ளார். மகளை காணாமல் அவரது தந்தை தேடி வந்தார். மருத்துவரிடம் இருந்து நேற்று முன்தினம் தப்பி சென்ற சிறுமி, நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறினார்.  அவர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சோனுவை கைது செய்தனர். அவரது கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள், சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவது அதிகரித்துள்ள, இந்நிலையில் உபி.யில் நடந்துள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

,

Advertisement