TODAY NEWS
Search
Dkn_Daily_News_June_2018__8294946551323

உலக கோப்பையில் விளையாடவே ரஷ்யா வந்துள்ளேன்… : முகமது சாலா உற்சாகம்

எகிப்து அணி நட்சத்திர வீரர் முகமது சாலா (25). கால்பந்து விளையாட்டில் தற்போது உலக அளவில் ரசிகர்களைக் கொண்ட நட்சத்திர வீரர்கள்  லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர், சுவாரெஸ் போன்றவர்களுக்கு இணையாகப் பேசப்படுபவர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த  லிவர்பூல் கிளப் அணிக்காக 44 கோல் அடித்துள்ள சாலாவின் ஆட்டம், உலக கோப்பையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சாம்பியன்ஸ் லீக்  தொடரின் பைனலில் ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொண்டபோது செர்ஜியோ ராமோஸின் முரட்டுத்தனமான ஆட்டத்தால் தோள்பட்டையில் படுகாயம்  அடைந்த சாலா, கண்ணீருடன் களத்தை விட்டு வெளியேறினார். இதனால் அவர் எகிப்து அணிக்காக உலக கோப்பையில் விளையாடுவது கேள்விக்குறியானது. எனினும், தேசிய அணிக்காக விளையாடியே தீருவேன்  என்ற உறுதியுடன் ரஷ்யா வந்துள்ள சாலா, இது குறித்து நேற்று கூறியதாவது: உலக கோப்பையில் விளையாட உள்ளதை நினைக்கும்போதே  மெய்சிலிர்க்கிறது. எந்த ஒரு கால்பந்து வீரருக்கும் இது லட்சியக் கனவாகவே இருக்கும். அந்தக் கனவு பலிக்கப்போவதை நினைத்து பெருமகிழ்ச்சி  அடைகிறேன். சாம்பியன்ஸ் லீக் பைனலில் காயம் அடைந்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், நல்ல விஷயம் என்னவென்றால், இப்போது உலக கோப்பையில் விளையாடுவதற்காக ரஷ்யா வந்துள்ளேன். அதுதான் முக்கியமானது. எங்கள்  அணி 1990க்கு பிறகு உலக கோப்பை பிரதான சுற்றில் விளையாடத் தகுதி பெற்றிருக்கும் நிலையில், நான் களமிறங்க முடியாமல் போயிருந்தால்  மிகப் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கும். நல்ல வேளையாக கடவுளின் அருளால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன். நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதை பற்றி நினைக்காமல், ஒவ்வொரு லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும்  என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோம். மிகக் கடினமாக பயிற்சி செய்து தயாராகி உள்ளோம். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என  நம்புகிறேன். இவ்வாறு சாலா கூறியுள்ளார்.

உலக கோப்பையில் விளையாடவே ரஷ்யா வந்துள்ளேன்… : முகமது சாலா உற்சாகம்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410843http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |13 Jun 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *