Dkn_Daily_News_May_2018__423656702042

ஐசிசி உலக லெவனில் நேபாள ஸ்பின்னர் சந்தீப்

லண்டன்: புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டி20 போட்டியில் மோதவுள்ள உலக லெவன் அணியில், நேபாள நாட்டின் 17 வயது சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லேமிகேன் சேர்க்கப்பட்டுள்ளார். இர்மா மற்றும் மரியா புயல் தாக்கியதில் வெஸ்ட் இண்டீசின் 5 கிரிக்கெட் மைதானங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்த ஸ்டேடியங்களை புதுப்பிப்பதற்காக புயல் நிவாரண நிதி திரட்டும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் – உலக லெவன் அணிகள் மோதும் டி20 போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மே 31ம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிக்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.கார்லோஸ் பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கேல், எவின் லூயிஸ், மார்லன் சாமுவேல்ஸ், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்தின் இயான் மார்கன் தலைமையிலான ஐசிசி உலக லெவன் அணியில் இடம் பெற்றிருந்த வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சொந்த காரணங்களுக்காக இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அறிவித்துள்ள ஐசிசி, நேபாள ஸ்பின்னர் சந்தீப் லேமிகேன் உலக லெவன் அணியில் இடம் பிடித்துள்ளதாக நேற்று அறிவித்தது.நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வரும் லேமிகேன் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 2016 யு-19 உலக கோப்பையில் நேபாள அணிக்காக களமிறங்கிய இவர் 16 விக்கெட்டுகளை அள்ளி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ்: கார்லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), கிறிஸ் கேல், எவின் லூயிஸ், சாமுவேல் பத்ரீ, கெஸ்டிக் வில்லியம்ஸ், மார்லன் சாமுவேல்ஸ், ரயாத் எம்ரிட், ஆந்த்ரே பிளெட்சர், ஆஷ்லி நர்ஸ், கீமோ பால், ரோவ்மன் பாவெல், தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), ஆந்த்ரே ரஸ்ஸல். உலக லெவன்: இயான் மார்கன் (கேப்டன்), தமிம் இக்பால், ஷாகித் அப்ரிடி, லூக் ரோங்கி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சோயிப் மாலிக், ஹர்திக் பாண்டியா, திசாரா பெரேரா, ரஷித் கான், மிட்செல் மெக்லநாகன், சந்தீப் லேமிகேன்.

ஐசிசி உலக லெவனில் நேபாள ஸ்பின்னர் சந்தீப்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402731http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |17 May 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *