TODAY NEWS
Search

ஒடிசாவில் பரபரப்பு : ஆய்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த 2 அதிகாரிகளுக்கு நூதன தண்டனை ; தோப்புக்கரணம் போடவைத்தார் கூடுதல் கலெக்டர்

,

கேந்திரபாரா: ஒடிசாவில் ஆய்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த 2 வருவாய் ஆய்வாளர்களை கூடுதல் கலெக்டர் தோப்புக்கரணம் போட வைத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம் ராஜ்நகரில் கடந்த செவ்வாய்கிழமை வருவாய் ஆய்வாளர்களின்  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மாவட்டத்தை சேர்ந்த வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது ரிககாடா பகுதி வருவாய்  ஆய்வாளர் சரத்குமார் பெகேரா மற்றும் குப்தி பகுதி வருவாய் ஆய்வாளர் கருணாகர் மாலிக் ஆகியோர் காலை 9.30 மணிக்கு பதிலாக 15 நிமிடம்  தாமதமாக கூட்டத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த மூத்த அதிகாரி ஒருவர் சரத் மற்றும் மாலிக் ஆகியோரை சக அலுவலர்கள் முன்னிலையில்  தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வருவாய் ஆய்வாளர்கள் இருவரும் இது தொடர்பாக கேந்திரபாரா கலெக்டர் ரெகுவிடம் புகார் மனு அளித்தனர். அதில்,  `ஆய்வுக் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் தங்கள் இருவரையும் கூடுதல் கலெக்டர் பசந்த்குமார் ரவத் உத்தரவின்பேரில் தோப்புக்கரணம் போட  வைத்து துன்புறுத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

,

Advertisement