கர்நாடக சட்டசபை தேர்தல் : அமைச்சர்கள் தோல்வி

,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். நேற்றைய வாக்கு எண்ணிக்கையில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான  அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலரின் நிலைமை இறங்கு முகமாகவே இருந்தது. சபாநாயகர்  கோலிவாட், அமைச்சர்கள் காகோடு திம்மப்பா, ஏ.மஞ்சு, ஆஞ்சநேயா, மகாதேவப்பா,  கீதாமகாதேவபிரசாத், சரணபிரகாஷ் பாட்டீல், மல்லிகார்ஜுன், சந்தோஷ்லாட்,  ரமாநாத் ராய், வினய்குமார் சொரகே, உமா, பிரமோத் மத்வராஜ், அபய் சந்திர  ஜெயின், வினய் குல்கர்னி   உள்ளிட்டோர் தோல்வியை சந்தித்துள்ளனர்.  முதல்வர்  சித்தராமையா, பாதாமியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றிருந்தாலும், சாமுண்டீஸ்வரி தொகுதில் மிகப்பெரிய தோல்வியை  சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

,

Advertisement