TODAY NEWS
Search

கர்நாடக நலனே முக்கியம் மோடிக்கு குமாரசாமி பதிலடி

,

பெங்களூரு: ‘‘எனது பிட்னசை விட மாநில  பிட்னஸ்தான் முக்கியம்’’ என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமர் மோடியின் உடற்பயிற்சி சவாலுக்கு பதிலடி  கொடுத்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர்  நரேந்திர மோடி நேற்று தனது பிட்னஸ் சவாலை சமூக வலைதளத்தில் வீடியோவாக  வெளியிட்டார். அதில், முதல்வர் குமாரசாமியையும் டேக் செய்து வெளியிட்டு  இருந்தார். இது குறித்து முதல்வர் குமாரசாமி  விடுத்துள்ள பதிலடியில், ‘‘உங்கள் சவாலை மதிக்கிறேன். என் உடல் நலத்தில்  அக்கறை செலுத்திய உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தினமும் நான்  யோகா பயிற்சி மேற்கொண்டு தான் வருகிறேன். என்னுடைய உடல் நலத்தை காட்டிலும்,  மாநிலத்தின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதற்கு உங்களுடைய  உதவியை எதிர்பார்க்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

,

Advertisement