கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

,

டெல்லி: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இரண்டரை மணிநேரமாக நடைபெற்ற காரசார வாதங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக எடியூரப்பா பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை சுமார் இரண்டரை  மணிநேரம் நீடித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக துஷர் மேத்தா, முகுல் ரோத்தகி, கே.கே.வேணுகோபால் ஆகிய 3 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.  மனுதாரர்கள் சார்பில் அபிஷேக் சிங்வி வாதிட்டார். உச்சநீதிமன்ற அறை எண் 6ல் விசாரணை நடைபெற்றது. இரண்டரை மணிநேரமாக நடைபெற்ற காரசார வாதங்களுக்கு பிறகு எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.15 நாட்களில் மாற்றமில்லை 15  நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆளுநரின் உத்தரவில் மாற்றமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக 15 நாட்களை 2 நாட்களாக குறைக்கக்கோரி காங்கிரஸ்-ம.ஜ.த சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டது குறிப்பிடத்தக்கது.பதவியேற்பை ஒத்திவைக்க கோரிக்கை பதவியேற்பை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அபிஷேக் சிங்வி உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பதவியேற்பை தள்ளிவைத்து, ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியலை அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

,

Advertisement