TODAY NEWS
Search

காதலி ஏமாற்றியதால் விரக்தி திருமணத்துக்காக திருடிய ரூ.5 லட்சத்துக்கு காதலன் தீ

,

சிஹோர்: மத்தியப் பிரதேசத்தில் காதலித்த பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஏமாற்றம் அடைந்த வாலிபர், ரூ.5 லட்சத்துக்கு தீ வைத்து எரித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர கோயல்(22). இவர் சிகோரில் உள்ள நிதி நிறுவனத்தில் கேஷியராக வேலை செய்து வந்தார். இளம்பெண் ஒருவரை இவர் காதலித்து வந்தார். காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக கோயல் தான் பணியாற்றிய நிறுவனத்தின் லாக்கரில் இருந்து ரூ.6.74லட்சத்தை திருடிசொந்த மாவட்டமான ஹர்தாவிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி பணம் திருடு போனது குறித்து நிறுவனத்தின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் கோயலிடம் போலீசார் மேற்கொண்டனர். விசாரணையில், கோயல் திருடிவிட்டு வந்தபின் காதலித்த பெண் ணை தொடர்பு கொண்டுள்ளார். அந்த பெண் தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற போவதாக கூறி கோயலை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் கோயல் ஆத்திரமடைந்துள்ளார். திருடிய பணத்தை கொட்டி தீ வைத்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து எரிந்த நிலையில் 5 லட்சம் ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.46ஆயிரம் மற்றும் வீட்டில் வைத்திருந்த ரூ.1,28ஆயிரத்தையும் பறிமுதல் செய்த போலீசார் ஜிதேந்திர கோயலை கைது செய்தனர்.

,

Advertisement