TODAY NEWS
Search

கார் விபத்தில் உயிருக்கு போராடியபோது காப்பாற்ற முயற்சிக்காமல் போட்டோ எடுத்தனர்: நடிகை மேகாமேத்யூ வேதனை

,

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையான மேகாமேத்யூ, கடந்த 2 தினங்களுக்கு முன் தனது அண்ணனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வதற்காக எர்ணாகுளத்தில் இருந்து கோட்டயத்திற்கு காரில் சென்றார். காரை தனியாக அவரே ஓட்டிச் சென்றார். கோட்டயம் முளந்துருத்தி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் இவரது கார் மீது மோதியது. இதில், மேகாமேத்யூவின் கார் தலைகீழாக கவிழ்ந்தது. காரில் சிக்கிக் கொண்ட அவர் காயத்துடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், விபத்து குறித்து மேகாமேத்யூ கூறியது: அண்ணனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வதற்காக நான் கோட்டயத்திற்கு காரை ஓட்டி சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது எதிரே வேகமாக வந்த கார் எனது கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இடித்த வேகத்தில் எனது கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. நான் காருக்குள் சிக்கிக் கொண்டேன். அங்கிருந்த யாரும் என்னை காப்பாற்ற முன்வரவில்லை. மாறாக அனைவரும் செல்போனில் போட்டி போட்டு படம் பிடித்துக் கொண்டிருந்தனர். இது எனக்கு அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது. அப்போது தற்செயலாக அங்கு வந்த ேபாட்டோகிராபர் தான் என்னை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். நான் அதிர்ஷ்டவசமாகத்தான் உயிர்பிழைத்தேன். இவ்வாறு கூறினார்.

,

Advertisement