TODAY NEWS
Search

காற்றுமாசு விவகாரம் கட்டுமானம், கட்டிட கழிவுகள் குறித்த தரவுகளை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும்

,

புதுடெல்லி: காற்றுமாசுவிற்கு காரணமாக கட்டுமானம் மற்றும் இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் உருவாக்கப்படும் இடங்கள் பற்றிய தரவுகளை சேகரித்து அதனுடன் முறையான ஆண்டறிக்கையை சமர்பிக்குமாறு மாநில பொதுப்பணித்துறையை டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. மாநகராட்சிகளுக்கு சொந்தமான பல்வேறு திறந்த வெளி பகுதிகளில் கட்டுமானம் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுவதால் காற்று மாசு அதிகரிக்கிறது. இது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு(டிபிசிசி) ஏராளமான புகார்கள் வந்தன.இதையடுத்து, இந்த மாத துவக்கத்தில், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம்(டிபிசிசி) பொதுப்பணித்துறைக்கு அளித்த உத்தரவில், காற்றுமாசுவை ஏற்படுத்தாத வகையில், கட்டுமானம் மற்றும் கட்டிட கழிவுப்பொருட்களை தகுந்த முறையில் கொட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தது. இதுதொடர்பாக பொதுப்பணி துறைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தாவது: திறந்தவௌியில் கட்டிட இடிபாடுகள் கொட்டப்படுவதே காற்றுமாசு அதிகரிக்க முக்கிய காரணம். இதனால் காற்றில் பிஎம் 10 மற்றும் பிஎம் 2.5 அளவு அதிகரித்து  சுவாச பிரச்னையை உருவாக்குகிறது. எனவே இதனை தவிர்க்க கட்டுமான தளங்களில் உள்ள இடிபாடுகளை அந்தந்த இடங்களில் இருந்து சேகரித்து அதற்கேற்ற இடங்களில் கொட்டுவதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை தாமாகவோ அல்லது பிற ஏஜென்சிகள் மூலமாகவோ மேற்கொள்ள வேண்டும். அதோடு, தங்களது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டுமான கழிவுகள் பற்றிய விவரங்களை கண்காணித்து, அதுபற்றிய தரவுகளை ஆண்டுக்கொரு முறை பதிவேற்றம் செய்யபடுவதோடு, ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. நகரின் வெவ்வேறான பகுதிகளில், வெவ்வேறு நேரங்களில் காற்றின்தரம் மாறுபடுகிறது. எனவே, காற்றின் தரத்தை உறுதி செய்ய ஆண்டு முழுவதும் காற்றின் தர ஆய்வு மேற்ெகாள்ளும்.எனவே, காற்றுமாசு ஏற்படுத்தும் காரணிகள் உள்ள இடங்களை கண்டறிந்து அங்குள்ள கழிவுகளை அகற்ற தேவைப்படும் இயந்திரங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது என ஆம் ஆத்மி கட்சி மூன்றாம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது, முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

,

Advertisement