TODAY NEWS
Search

காவிரி ஆணைய பிரதிநிதிகள் கர்நாடகாவுக்கான கெடு முடிந்தது மத்திய அரசு மீண்டும் கடிதம்

,

புதுடெல்லி:   காவிரி ஆணையத்துக்கு உறுப்பினர்கள் பெயரை பரிந்துரைப்பதற்கான கர்நாடகாவுக்கான கெடு நேற்றோடு முடிந்தது. இந்நிலையில் விரைவில் பட்டியலை அனுப்பி வைக்கும்படி மீண்டும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தமிழகம். புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தங்களது பிரதிநிதிகளின் பட்டியலை மத்திய நீர்வளத்துறைக்கு அனுப்பிவிட்டன. ஆனால், கர்நாடகா மட்டும், பிரதிநிதிகளின் பட்டியலை அனுப்பாமல் இழுத்தடித்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 12ம் தேதிக்குள் கர்நாடக மாநிலத்தின் சார்பாக காவிரி ஆணையத்தில் பங்காற்றக்கூடிய உறுப்பினர் பட்டியலை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கடந்த 9ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால், மத்திய அரசு வழங்கிய கெடு நேற்றோடு முடிந்துவிட்ட நிலையிலும் காவிரி ஆணையத்தின் பிரதிநிதிகள் பட்டியலை அனுப்பி வைக்காமல் கர்நாடகா தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளரான சஞ்சய் குண்டு கர்நாடக மாநிலத்திற்கு நேற்று ஒரு நினைவூட்டல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அதில், ‘காவிரி ஆணையத்தில் பங்காற்றக்கூடிய பிரநிதிகளின் பட்டியலை காலதாமதம் செய்யாமல் விரைவில் அனுப்பி வைக்க வேண்டும். கால தாமத்தால் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் நடத்தாமல் கால தாமதமாகி வருகிறது’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

,

Advertisement