குடியிருப்புகளை நோக்கி பாக். துப்பாக்கிச்சூடு

,

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. ஜம்மு காஷ்மீர் மாநிம் சம்பா  மற்றும் கதுவா மாவட்டங்களில் எல்லைப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியது. 15 புற எல்லை  நிலைகளை குறிவைத்தும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீதும் பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். மார்டர் ரக குண்டுகள் வீசி  தாக்கப்பட்டதோடு துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் இந்திய வீரர்  ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறு முதல் இதுவரை சர்வதேச எல்லையில் 4 ஊடுருவல்கள்  முறியடிக்கப்பட்டுள்ளது.

,

Advertisement