TODAY NEWS
Search

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு : மேலும் 3 பேரை ேதடும் பணி தீவிரம்

,

திருமலை: கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து  வருகிறது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 15ம் தேதி 44 பேருடன் சென்ற படகு திடீர் சூறாவளி காற்று காரணமாக கவிழ்ந்தது. இதில்  22 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். மற்றவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் தலைமையில் 25 படகுகள்  மூலம் 300 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 40 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் படகு மீட்கப்பட்டது. படகில் இருந்த 15 பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று மேலும் 5 பேரின் சடலங்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இவர்களின் பெயர்  உட்பட விவரங்கள் தெரியவில்லை. இதன் மூலம் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, படகில் சென்றதாக கூறப்படும் மேலும் 3   பேரின் சடலங்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

,

Advertisement