Dkn_Daily_News_May_2018__7602001428605

கோப்பா இத்தாலியா கால்பந்து: ஜூவென்டஸ் சாம்பியன்

ரோம்: கோப்பா இத்தாலியா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஏசி மிலன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்று ஜூவென்டஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.ரோம் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சளைக்காமல் மோதின. முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படாத நிலையில், 2வது பாதியில் ஜூவென்டஸ் முழு ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் பெனாடியா 56, 64வது நிமிடத்தில் 2 கோல் அடித்து அசத்தினார். டோக்லஸ் கோஸ்டா 61வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஏசி மிலன் கோல் அடிக்க முடியாத நிலையில், அந்த அணியின் கிளானிக் 76வது நிமிடத்தில் ‘ஓன்-கோல்’ அடிக்க, ஜூவென்டஸ் 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடர்ச்சியாக 4வது முறையாக கோப்பா இத்தாலியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. இத்தொடரில் ஜூவென்டஸ் அணி 13வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது.

கோப்பா இத்தாலியா கால்பந்து: ஜூவென்டஸ் சாம்பியன்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=400961http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |11 May 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *