TODAY NEWS
Search

சதர்பூர் என்கவுன்டரில் ெகால்லப்பட்ட 4 பேரின் பிரேத பரிசோதனை

,

புதுடெல்லி : ராஜேஷ் பார்தி உள்பட தேடப்படும் சில குற்றவாளிகள் தெற்கு டெல்லியின் சதர்பூரில் காரில் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அந்த காரை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது நடந்த போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவரான பார்தி இதற்கு முன்பும் தன்னை பிடிக்க வந்த போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு தப்பியோடியவன். பார்தியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட சஞ்சீவ் என்கிற சந்தீப் வித்ரோ, உமேஷ் என்கிற டான் , வீரேஷ் ரானா என்கிற பிக்கு ஆகிய நால்வரின் உடல்கள் நேற்றுதான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, கொள்ளையர்களால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 காவல்துறையினரை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆறுதல் கூறினர். சதர்பூர் என்கவுன்டர் வழக்கு விசாரணை மாவட்ட காவல்துறையிடமிருந்து குற்றப் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

,

Advertisement