TODAY NEWS
Search

சரக்கு கப்பலில் தீ: 22 மாலுமிகள் மீட்பு

,

கொல்கத்தா: வங்கக் கடலில் தீப்பிடித்து எரித்த இந்திய சரக்கு கப்பலில் இருந்த 22 மாலுமிகள் பத்திரமாக மீட்டனர். ‘எம்.வி எஸ்எஸ்எல் கொல்கத்தா’ என்ற கன்டெய்னர் கப்பல், மேற்கு வங்கம் ஹால்டியா துறைமுகத்திலிருந்து 55 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த கப்பலில் தீ பிடித்தது. இதையடுத்து அந்த கப்பலில் இருந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. ஹால்டியா துறைமுகத்திலிருந்து உடனடியாக கடலோர காவல் படை கப்பலும், டோர்னியர் ரக விமானமும் மீட்பு பணிக்கு அனுப்பப்பட்டது. நேற்று அதிகாலை சரக்கு கப்பலை நெருங்கிய கடலோர பாதுகாப்பு படையினர், அதில் இருந்த கேப்டன் உட்பட 22 மாலுமிகளையும் பத்திரமாக மீட்டனர். அவர்களுடன் கடலோர காவல் படை கப்பல் ஹால்டியா துறைமுகம் திரும்பியது.

,

Advertisement