TODAY NEWS
Search
Dkn_Daily_News_2018_9387279748917

சாதனையுடன் ராஜீவ் தங்கம்

துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 50 மீ. ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்தியாவின் சார்பில் ராணுவ அதிகாரியான ராஜீவ் ராஜ்புத் பங்கேற்றார். இவர் பைனலில் 454.5 புள்ளிகள் பெற்று புதிய காமன்வெல்த் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன் காமன்வெல்த்தில் இவர் 2014ல் வெள்ளியும், 2010ல் வெண்கலமும் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான செயின் சிங் 419.1 புள்ளிகளுடன் 6வது இடமே பெற்றார். ஆண்கள் டிராப் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் கியான் செனாய், மானவ்ஜித் சாந்து இருவரும் பைனலுக்கு முன்னேறத் தவறினர். துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதில், இந்தியாவுக்கு 6 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

சாதனையுடன் ராஜீவ் தங்கம்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=393566http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |15 Apr 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *