TODAY NEWS
Search
Dkn_Daily_News_2018_9214092493058

சிஎஸ்கே அணியில் அடுத்த போட்டிக்கு முரளி விஜய் தயார்

மும்பை : கேதார் ஜாதவ், சுரேஷ் ரெய்னா என அடுத்தடுத்து வீரர்கள் காயத்தால் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், துவக்க பேட்ஸ்மேன் முரளி விஜய், முழு உடல் தகுதியுடன் விளையாட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் டி20 சீசன் 11 தொடரில் 2 ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் 2 லீக் போட்டியிலும் த்ரில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது. ஆனாலும், முதல் போட்டியுடன் கேதார் ஜாதவ் முதுகுவலி காரணமாக தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். தற்போது ரெய்னா கணுக்கால் காயம் காரணமாக குறைந்தபட்சம் 10 நாட்கள் விளையாட முடியாத நிலையில் உள்ளார். இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.இந்நிலையில், முதல் 2 போட்டியிலும் விளையாடாத சென்னையைச் சேர்ந்த முரளி விஜய் விளையாட தயாராகி விட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. காயம் குணமான நிலையில் முழு உடல் தகுதி பெறாததால் முரளி விஜய், முதல் 2 போட்டியில் விளையாடவில்லை. தற்போது அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால், நாளை மறுதினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளார். முதல் 2 போட்டியில் துவக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய அம்பாதி ராயுடு, 3வது வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. முரளி விஜயின் வரவு சிஎஸ்கேவுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது.

சிஎஸ்கே அணியில் அடுத்த போட்டிக்கு முரளி விஜய் தயார்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=393345http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |14 Apr 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *