TODAY NEWS
Search

சிக்கபள்ளாபூர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கடத்தி கொலை

,

சிக்கபள்ளாபூர்: வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.சிக்கபள்ளாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகா, அம்பாஜி துர்கா பேரூராட்சிக்கு உட்பட்ட சாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சனாதேவி. இவர் நேற்று தனது 8 வயது மகளுடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, சில மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச்சென்றுள்ளனர். பின்னர், பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் கொலை செய்து கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில் வீசி எறிந்து சென்றுள்ளனர். நேற்று காலை சிறுமி காணாமல் போனது குறித்து தெரியவந்தது. இதனால், பதறிப்ேபான சிறுமியின் பெற்றோர் ஊர் முழுக்க தேடினர். பின்னர், கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில் சிறுமி உடல் இருப்பது குறித்து அவ்வழியே சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர். பெற்றோர்  ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது சிறுமி ெகாலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் எஸ்.பி. கார்த்திக்ரெட்டி  ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அம்பாஜி தர்கா ஊரக போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகினறனர்.

,

Advertisement