TODAY NEWS
Search

சிக்கலில் தவிக்கும் வக்ப் வாரியம் வருவாய், தொழில்நுட்ப அதிகாரிகள் பற்றாக்குறை பராமரிப்பு பணிகள் தேக்கம்

,

புதுடெல்லி: தலைகரில் வக்ப் வாரியத்தின் வசம் உள்ள 2,000 க்கும் அதிகமான முஸ்லீம் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு தொழில்நுட்ப மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் உள்ளது. ஆனால், அதிகாரிகளின் பற்றாக்குறையால் சொத்துக்களைநிர்வகிப்பதில் கடும் நெருக்கடிகளை வக்ப் வாரியம் எதிர்கொண்டு வருகிறது. வக்ப் வாரியத்தின் வசம் உள்ள சொத்துக்களை பாதுகாப்பதில் அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இதற்காக வக்பு வாரியத்தில் அனுமதிக்கப்பட்ட 66 பதவிகளில் 28 இடங்கள் வருவாய் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தது. இந்த இடங்கள் தற்போது நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் சொத்துக்களை பாதுகாப்பது மட்டுமின்றி பிற பணிகளும் பராமரிப்பின்றி இருந்து வருகிறது. வக்பு வாரிய சொத்துக்களில் 90 சதவீத பணிகள் வருவாய் சம்பந்தப்பட்டது. ஆனால், வருவாய் துறை அதிகாரிகளான பட்வாரி, கணூங்கோ மற்றும் தாசில்தார் பணியிடங்கள் காலியாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு இதில் இருந்து அதிகாரிகள் ஓய்வு பெற்றது முதல் காலியாகவே உள்ளது. கணூங்கோ பதவியை பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக காலியாக இருந்து வருகிறது. வக்பு வாரியத்தின் வசம் தயார்கஞ்ச். அன்சாரி ேராடு, வசந்த் கன்ஞ், கிரேட்டர் கைலாஷ் மற்றும் பிற இடங்களில் உள்ள நிலம், கடைகள், குடியிருப்பு கட்டிடங்கள் தற்போது அதிகாரிகள் இல்லாதததால் பராமரிப்பின்றி உள்ளன. தற்போதைய நிலையில், 12-14 பியூன்கள் மற்றும் ஓட்டுநர்கள், 8 கிளர்க்குகள் 36 ஊழியர்கள் உள்ளனர். சர்வேயர், ஜூனியர் இன்ஜினியர்கள், மண்டல இன்ஜினியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக, சர்வே பணிகள், ஆக்கிரமிப்பு கண்காணிப்பு சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் வருவாயை வசூலிப்பது போன்ற பணிகள் தேங்கியுள்ளன. இதுதவிர, வக்பு வாரியத்துக்கு சொந்தமாக 1964சொத்துக்களில் 500க்கும் அதிகமானவை கெசட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. பராமரிக்கப்படும் இந்த சொத்துக்கள் மதிப்பு சுமார் 1200 கோடியாகும். எனவே, இந்த காலியிடங்கள் நிரப்பப்படவில்லை எனில், இவற்றை பராமரிப்பது இயலாத காரியமாகும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  மேலும், வக்பு வாரியம் அமைக்கப்படாததால் அலுவல் பணிகளும் முடங்கியுள்ளன. 7 பேர் கொண்ட வக்ப் வாரிய உறுப்பினர் குழு நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்து குழுவை அப்போதைய துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் கலைத்து உத்தரவிட்டார் அதுமுதல் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

,

Advertisement