TODAY NEWS
Search
Dkn_Daily_News_2018_3159404993058

சிந்து-சாய்னா பைனலில் மோதல்

பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், இந்தியாவின் பி.வி.சிந்து 21-18, 21-8 என்ற நேர் செட்களில் கனடாவின் மிச்செலி லியையும், சாய்னா நெஹ்வால் 21-14, 18-21, 21-17 என்ற செட்களில் ஸ்காட்லாந்தின் கில்மோரையும் வென்று பைனலில் நுழைந்துள்ளார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கத்திற்காக சிந்துவும், சாய்னாவும் மோத உள்ளனர். இதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி காந்த் 21-10, 21-17 என்ற செட்களில் இங்கிலாந்தின் ராஜிவ் ஓசேப்பை வீழ்த்தி பைனலில் நுழைந்தார். பைனலில் இவர் மலேசியாவின் சோங்க் வெய் லீயை எதிர்த்து விளையாடுகிறார்.  மகளிர் இரட்டையர் பிரிவில் சிக்கி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலம் வென்று ஆறுதல் அளித்தது.

சிந்து-சாய்னா பைனலில் மோதல்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=393567http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |15 Apr 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *