Dkn_Daily_News_2018_7769695520402

‘சிறந்த வீரர், மேதை…’ புகழ் மழையில் கோஹ்லி

கேப் டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்த இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியை முன்னாள், இன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்து தள்ளுகின்றனர். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டியிலும் இந்திய அணி வென்றுள்ளது. கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணி 124 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதில் கேப்டன் கோஹ்லி 160 ரன் விளாச இந்திய அணி 303 ரன் குவித்தது.சாஹல் (4 விக்கெட்), குல்தீப் யாதவ்வின் (4 விக்கெட்) சிறப்பான பந்துவீச்சால் தென் ஆப்ரிக்கா 179 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. முதல் ஒருநாள் போட்டியிலும் சதம் (112 ரன்) அடித்துள்ள ேகாஹ்லியை முன்னாள், இன்னாள் வீரர்கள் பலர் புகழாரம் சூட்டி வருகின்றனர். ‘அனைத்து காலத்திலும் மிகச்சிறந்த ஒருநாள் வீரராக கோஹ்லி திகழ்கிறார்’ என ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறி உள்ளார். ‘என்ன ஒரு ஆட்டம், என்ன ஒருவீரர்… வேற லெவல்’ என ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் கூறி உள்ளார்.‘தென் ஆப்ரிக்காவில் முதல் 2 டெஸ்டில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. 3வது போட்டியில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 3 ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியின் பக்கம் மட்டுமே வெற்றி இருந்துள்ளது. ஒரு தரப்பு போட்டியாக 3 ஆட்டங்களும் இருந்தன. இந்த வெற்றிகள் நம்மால் சிறப்பாக பயணிக்க முடியும் என்பதை காட்டுகின்றன. 34வது சதம் அடித்திருக்கும் கோஹ்லி, அடுத்தடுத்து சதங்களை அடித்தது சிறப்பாகும்’ என சச்சின் டெண்டுல்கரும் கூறி உள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் ேகப்டன் ஜாேவத் மியான்டட் கூறுகையில், ‘‘பந்துவீச்சாளர்களின் பலம், பலவீனத்தை மிக விரைவாக கணிக்கிறார் விராத் கோஹ்லி. அவரது ஆட்டத்திறனும், நுணுக்கமும் மிகச்சிறப்பாக உள்ளது. அதனால் அவரால் அடுத்தடுத்து சதத்தை விளாச முடிகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மாமேதையாக இருக்கிறார்’’ என கூறி உள்ளார். அதே நேரத்தில், கேப்டன் கோஹ்லி, 3வது ஒருநாள் போட்டியின் வெற்றிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் சாஹலும், குல்தீப் யாதவ்வும் முக்கிய காரணம் என கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘சாஹல், குல்தீப்பின் பந்துவீச்சை வர்ணிக்க வார்த்தையே இல்லை. மிகச்சிறப்பாக பந்துவீசினார்கள். அவர்களுக்கு சாதகமாக ஆடுகளமும் அமைந்திருந்தது. பேட்ஸ்மேன்கள் அபாயகரமான ஷாட்களை அடிக்க தூண்டும் வகையில் இருவரின் பந்துவீச்சும் அமைந்திருந்தது. 2019 உலக கோப்பையில் இவ்விரு சுழற்பந்து வீச்சாளர்களும் தான் இந்தியாவின் துருப்பு சீட்டாக இருப்பார்கள்’’ என கூறி உள்ளார். 4வது ஒருநாள் போட்டி நாளை ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

‘சிறந்த வீரர், மேதை…’ புகழ் மழையில் கோஹ்லிhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=374299http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |09 Feb 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *