சுகாதாரமான உணவை தயாரிக்க உ.பி. சிறைகளில் நவீன சமையலறை

,

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள சிறைச் சாலைகளில் நவீன சமையலறை அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உபி  சிறைத்துறை ஐஜி பிகே மிஸ்ரா கூறியதாவது: மாநிலத்தில் முதல்கட்டமாக 25 மாவட்டங்களில் ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் மாடுலர் கிச்சன் வசதி  அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு சப்பாத்தி தயாரிப்பதற்கான பணி நேரம் பெருமளவில் குறையும்.சமையல்  செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல் நலனிலும் பாதிப்பு ஏற்படாது. சிறைக் கைதிகளுக்கு இந்த மெஷின்களை எப்படி இயக்குவது என்பது தொடர்பாக நிபுணர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இதன் முக்கிய  நோக்கமே கைகளை பயன்படுத்தாமலும், சுகாதாரமான முறையிலும் உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்பதாகும் என்றார்.

,

Advertisement