TODAY NEWS
Search

டெல்லி பிரகதி மைதானத்தில் தனியார் ஓட்டலுக்கு நிலம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

,

புதுடெல்லி: டெல்லி பிரகதி மைதானத்தில் தனியார் நிறுனம் ஓட்டல் கட்ட 3.7 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடியது. இதில் சில முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.  டெல்லி பிரகதி மைதானத்தில் முக்கியமான கண்காட்சிகள் நடைபெறுகிறது. ஆனால் இங்கு உலகத் தரம் வாய்ந்த ஓட்டல்கள் இல்லாதது குறையாக இருந்தது. இதனால் இங்கு தனியார் நிறுவனம் ஓட்டல் கட்ட இங்குள்ள 3.7 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டது.  எச்.டி.எப்.சி வங்கி தனது வர்த்தக வளர்ச்சிக்கு ₹24 ஆயிரம் கோடி அன்னிய முதலீடு பெற்றுக் கொள்ளவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த நிதியமைச்சர் பியூஷ் கோயல், ‘‘இதுவரை வங்கிகளில் அன்னிய முதலீட்டு அளவு 72.62 சதவீதமாக இருந்தது. தற்போது 24 ஆயிரம் கோடி அன்னிய முதலீடுக்கு அனுமதித்ததன் மூலம் வங்கிகளில் அன்னிய முதலீட்டு அளவு 74 சதவீதமாக உயர்ந்துள்ளது’’ என்றார். சுற்றுலா பஸ் மீது லாரி மோதி 6 பேர் பலி: திருமலை, ஜூன் 14: விஜயநகரம் மாவட்டத்தில் சுற்றுலா பஸ் மீது  லாரி  மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். ஆந்திராவின் எஸ்ராயவரம் கிராமத்தை சேர்ந்த 42 பேர் தனியார் பேருந்தில் வட இந்திய ஆன்மிக சுற்றுலா சென்று  காசியில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். விஜயநகர மாவட்டம், கோரிப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை வளைவில் நேற்று மாலை வந்தபோது, எதிரே வந்த லாரி பஸ்மீது வேகமாக மோதியது. இதில் பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்படுத்திய லாரி மீது பின்னால் வேகமாக வந்த மற்றொரு லாரியும் மோதியது. இதில் 3 வாகனங்களும் நொறுங்கின.இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

,

Advertisement