TODAY NEWS
Search

டெல்லி ராஜ்பவனில் சிசோடியாவும் உண்ணாவிரதம்

,

புதுடெல்லி: டெல்லி ஆளுநர் அலுவலகத்தில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பகுதி நேர ஸ்டிரைக்கை முடித்து பணிக்கு திரும்ப உத்தரவிடுவதோடு, அமைச்சர்களுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஆளுநர்  அலுவலகத்தில் கெஜ்ரிவால் 3வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இங்கு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுடன் துணை முதல்வர் சிசோடியாவும் உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார். ஆம் ஆத்மியினர் ஆளுநர்  அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். இதில், பாஜ.்விலிருந்து விலகிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஸ்வந்த் சின்ஹா கலந்துகொண்டு உரையாற்றினார். இதனால், அலுவலகம் வருவதை  ஆளுநர் பைஜால் தவிர்த்தார்.தங்களின் போராட்டம் குறித்து கவர்னர் அலுவலகத்தில் இருந்தபடியே  கெஜ்ரிவாலும், சிசோடியாவும் டிவிட்டரில் பதிவுகளை போடுவதில் தீவிர இருந்தனர்.

,

Advertisement