Dkn_Daily_News_May_2018__4056011438370

ட்வீட் கார்னர்… இது நீச்சல் நேரம்!

அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்டதால் அந்த அணி வீரர்கள் ரிலாக்சாக உள்ளனர். மகள் நோனாவுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை நேற்று ட்வீட் செய்துள்ள ஹர்பஜன். ‘நோனாவுடன் இது நீச்சல் நேரம். பொழுது இனிதே கழிகிறது’ என்று தகவல் பதிந்துள்ளார். சென்னை அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டம் எஞ்சியுள்ளது. நாளை டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதும் அந்த அணி, கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 20ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்திக்கிறது

ட்வீட் கார்னர்… இது நீச்சல் நேரம்!http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402729http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |17 May 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *