Dkn_Daily_News_May_2018__5249096155167

ட்வீட் கார்னர்…வதந்தி பரப்ப வேண்டாம்!

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் ரிஷப் பன்ட், 12 போட்டியில் 582 ரன் குவித்து (அதிகம் 128*, சராசரி 52.90, சதம் 1, அரை சதம் 4) ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். அபாரமாக விளையாடி வரும் பன்ட், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடக்க உள்ள டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அவர் மிகுந்த கோபமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும் தேர்வுக் குழுவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், ‘இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து நான் கூறியதாக வந்துள்ள செய்திகளில் உண்மையில்லை. அது போல நான் எப்போதும் கூறவே இல்லை. இதை தன்னிலை விளக்கமாகவே தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள். என்னை கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த விடுங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

ட்வீட் கார்னர்…வதந்தி பரப்ப வேண்டாம்!http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402102http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |15 May 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *