TODAY NEWS
Search

தலைநகரில் சுட்டெரித்த வெயில்

,

புதுடெல்லி : டெல்லியில் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை 22.4 டிகிரியாக பதிவானது. இன்று நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 50 சதவீத விவசாயம் மழையை நம்பியே உள்ளது. கடந்த ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் விவசாய உற்றபத்தியின் பங்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. குறிப்பாக, நாட்டின் 50 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களை நம்பி உள்ளனர் மேலும் 15 சதவீத ஜிடிபி விவசாயம் மற்றும் அதனை சார்ந்துள்ளவற்றின் மூலமே கிடைக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நாடு முழுவதும் மழை அளவு சராசரி அளவிலேயே இருக்கும்  என வானிலை மையம் உறுதிபட  தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு  கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல் விவசாய உற்பத்தி அதிகரித்து கிராம  பொருளாதார நிலை மேம்படும் என அரசும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

,

Advertisement