TODAY NEWS
Search

தலைமை செயலர் தாக்கப்பட்டதன் எதிரொலி அரசியல்வாதிகள், அதிகாரிகள் கடமை வரையறை செய்யப்பட வேண்டும்

,

புதுடெல்லி : அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கடமைகள் குறித்து தெளிவாகவும், நன்றாகவும் வரையறை செய்து தனித்தனியே அறிவிக்கப்பட வேண்டும் என முன்னாள் அரசு அதிகாரிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அரசின் பல்வேறு துறைகளில் நீண்ட காலம் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளின் சங்கக் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. டெல்லி நிர்வாக அதிகாரிகள் அகடமிக் போரம், ஏஜிஎம்யுடி பிரிவு ஐஏஎஸ் சங்கம், டேனிக்ஸ் அதிகாரிகள் சங்கம் மற்றும் டெல்லி அரசு ஊழியர்கள் நலச் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.‘மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் இந்திய நிர்வாக சேவைகள் இடையே சுமுக உறவுமுறைக்கான நடத்தை விதிகள் உருவாக்குதல்’, எனும் தலைப்பில் ஓய்வதிகாரிகள் சங்க கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.கூட்டத்தில் முன்னாள் அதிகாரியும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சுற்றுச்சூழல் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (இபிசிஏ) தற்போதைய தலைவருமான புரே லால் கூறியதாவது:அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு என நடத்தை விதிகள் வரையறுக்கப்பட வேண்டிய வேளை வந்துள்ளது. வரையறை செய்யாவிட்டால் ‘மவுன பாதிப்பாளர்களாக’ அதிகாரிகள் பணிபுரிய வேண்டியிருக்கும்.அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கடமைகள் குறித்து தெளிவாகவும், நன்றாகவும் வரையறை செய்து தனித்தனியே அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்போம். அதற்காக பாடுபடவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.அரசியலமைப்பு சாசனத்தில் கூறப்பட்டு இருப்பதை பின்பற்றி நாம் பணி புரிந்தோம். முதலமைச்சரின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என அரசியலமைப்பில் எதுவும் கூறப்படவில்லை. அரசியல்வாதிகள் கை எப்போதும் ஓங்கியிருக்கக் கூடாது. பண்பட்ட மற்றும் பழுத்த அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் அரசு அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து கேட்டுக் கொள்வார்கள். முதல் முறை அல்லது இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பாக்கியம் பெற்றவர்களிடம் இருந்துதான் பிரச்னைகள் எப்போதும் உருவாகிறது. (கெஜ்ரிவாலுக்கு மறைமுக குட்டு). இவ்வாறு லால் கூறினார்.முன்னாள் தலைமைச் செயலாளர் ஒமேஷ் சைகால் கூறுகையில், ‘‘கடந்த 3 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் இடையே சுமுகமான போக்கு நிலவவில்லை. இரு தரப்பு உறவும் இனிமையாக விளங்க வேண்டும். அதிகாரிகளின் உரிமைகளுக்கு என சில குறிப்பிடத்தக்க வரம்புகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகளின் கைப்பிடிக்கும் சிக்காமல் அதிகாரிகளால் சிறப்பாக செயல்பட முடியும். அரசியல்வாதிகளால் பாதிப்பு அனுபவக்க நேரும் அதிகாரிகளுக்கு அரசுதான் பாதுகாப்பாக விளங்க வேண்டும்’’, என்றார்.கொடூர தாக்குதலுக்கு உள்ளாவதற்காகவா நாமெல்லாம் அரசு நிர்வாகத்திற்கு தேர்வானோம்? என உத்தரப்பிரதேச மாநில முன்னாள் டிஜிபி விக்ரம் சிங் ஆவேசமாக பேசியது உறுப்பினர்களை உலுக்கி எடுப்பதாக அமைந்தது.

,

Advertisement