Dkn_Daily_News_2018_6924968957902

தவானை வழியனுப்பிய ரபாடாவுக்கு அபராதம்!

இந்திய அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியின்போது, தொடக்க வீரர் ஷிகர் தவானை பவுன்சர் பந்துவீச்சில் அவுட்டாக்கிய தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா அவரை பெவிலியன் திரும்புமாறு சைகை காட்டினார். விதிமுறைகளை மீறி தரக்குறைவாக நடந்து கொண்ட ரபாடாவின் செயல் குறித்து ஐசிசிபோட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், மோசமான நடத்தைக்காக 1 டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. இதுவரை 5 டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ள ரபாடா, 2019 பிப்ரவரி 2வது வாரத்துக்குள் இந்த எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தால் 2 டெஸ்ட் போட்டிகள் அல்லது ஒரு டெஸ்ட், 2 ஒருநாள்/டி20 அல்லது 4 ஒருநாள்/டி20 போட்டிகளில் தடை விதிக்கப்படும்.

தவானை வழியனுப்பிய ரபாடாவுக்கு அபராதம்!http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=376025http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |15 Feb 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *