TODAY NEWS
Search

தியேட்டரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : வழக்கை முறையாக விசாரிக்காத எஸ்ஐ மீது போக்சோ பிரிவில் வழக்கு

,

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே தியேட்டரில் 10 வயது சிறுமியை தொழிலதிபர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கை முறையாக விசாரிக்காத  சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள திருத்தாலா பகுதியை  சேர்ந்தவர் மைதீன் (60). பிரபல தொழிலதிபரான இவர் துபாய் உள்பட பல நாடுகளில் சொந்தமாக நிறுவனங்களை வைத்துள்ளார். கடந்த சில  தினங்களுக்கு முன்பு மலப்புரம் எடப்பாழ் என்ற இடத்தில் உள்ள சினிமா தியேட்டரில் தாயுடன் வந்த 10 வயது சிறுமியை மைதீன் பாலியல் ரீதியாக  துன்புறுத்தினார். இது அங்குள்ள கேமராவில் பதிவானது.கேமரா காட்சிகளை சினிமா தியேட்டர் ஊழியர்கள் குழந்தைகள் நல அமைப்பினரிடம் கொடுத்தனர். அவர்கள் பரிசீலித்த பின்னர் சங்கரன்குளம்  போலீசில் புகார் அளித்தனர். ஆனால் பணியில் இருந்த சப்-இன்ஸ்ெபக்டர் பேபி வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்து வந்தார். இதையடுத்து 2  வாரமாக வழக்கு பதிவு செய்யவில்லை. இதற்கிடையே இந்த வீடியோ காட்சிகள் மலையாள தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. அதன் பிறகு  சப்-இன்ஸ்பெக்டர் பேபி வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து மைதீன் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் மகளை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதற்கு தாயும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. ேபாலீசார் மைதீன் மீதும், தாய் மீதும்  போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் உடனடியாக முறையாக விசாரணை நடத்தாத சப்-இன்ஸ்பெக்டர் ேபபி  மீதும் தற்போது போக்சோ பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

,

Advertisement