திருப்பதி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக சென்னை ஆடிட்டர் பதவி ஏற்பு

,

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காலவர் குழு உறுப்பினராக சென்னை ஆடிட்டர் நேற்று பதவி ஏற்று கொண்டார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் மற்றும் உறுப்பினர் கடந்த வாரம் பதவி ஏற்றனர். இதில்  தமிழகத்தின் சார்பில் யாருக்கும் பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் கிருஷ்ணாவுக்கு அறங்காவலர் குழு  உறுப்பினர் பதவியை ஆந்திர அரசு அறிவித்தது. இதையடுத்து, கிருஷ்ணா நேற்று ஏழுமலையான் கோயிலில் பதவி ஏற்றார். அவருக்கு அறங்காவலர்  குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், கிருஷ்ணா நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த உறுப்பினர் பதவி கிடைத்தது சுவாமி எனக்கு வழங்கிய வாய்ப்பாக கருதுகிறேன். வாய்ப்பளித்த  முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார். மேலும், கிருஷ்ணா ஏற்கனவே சென்னை தி,நகரில் உள்ள  தேவஸ்தான தகவல் மைய அறங்காவலர் குழு தலைவராக பதவி வகித்து வந்தார். 

,

Advertisement