TODAY NEWS
Search

தொடர் கன மழையால் உ.பி.யில் 69 பேர் பலி 20 லட்சம் மக்கள் பாதிப்பு

,

லக்னோ : உத்தர பிரதேசத்தில் பலத்த மழை ெபய்து வருவதால், 24 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான  பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதில் சிக்கி 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மழையால் நேற்று முன்தினம் வரை 69 பேர்  இறந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து 40 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால்  நேபாளத்தின் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அவை உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதி மாவட்டங்களில் புகுந்துள்ளது. வெள்ளத்தால்  மோசமாக பாதித்துள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், ராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேபாள ஆறுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், இடைவிடாமல் பெய்துவரும் மழையால் மீட்பு பணிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.  சார்தா,  காக்ரா ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டி உள்ளன. இதனால், இந்த ஆறுகளை ஒட்டியுள்ள பல்ராம்பூர், பன்சி, ரிகாலி, பர்த்கட், காக்ராகி, த்ரிமோகினி  கத் மற்றும் சந்திரதீப் கத் போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

,

Advertisement