TODAY NEWS
Search

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மனைவி, விவசாயிகளுக்கு அமிதாப் பச்சன் ரூ.2 கோடி நன்கொடை

,

மும்பை: நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவியர் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக நடிகர் அமிதாப் பச்சன் ரூ.2 கோடி நன்கொடை வழங்குகிறார். உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவிமார்களின் நலனுக்காக ரூ.1 கோடியும், விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த உதவிடும் விதமாக ரூ.1 கோடியும் அமிதாப் பச்சன் நன்கொடை வழங்கவிருப்பதாக தகவல் வெளியானது.தான் வழங்கும் இந்த நன்கொடை உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதற்காக தனிக்குழு ஒன்றை அமிதாப் பச்சன் அமைத்திருப்பதாகவும் இந்த குழு உண்மையான பயனாளிகளை கண்டறிந்து பட்டியல் தயாரிக்கும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவலை அமிதாப் பச்சன் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

,

Advertisement