TODAY NEWS
Search
Dkn_Daily_News_2018_9775768518448

நிடஹாஸ் டிராபி டி20 மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

கொழும்பு : முத்தரப்பு டி20 தொடரில், இந்தியா – இலங்கை அணிகளிடையே நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக மழை பெய்ததால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு தலா 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர்.டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இலங்கை தொடக்க வீரர்களாக குணதிலகா, குசால் மெண்டிஸ் களமிறங்கினர். குணதிலகா 17 ரன் எடுத்து ஷர்துல் தாகூர் வேகத்தில் ரெய்னாவிடம் பிடிபட்டார்.  அடுத்து வந்த குசால் பெரேரா 3 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இலங்கை 3.1 ஓவரில் 34 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்தது. இந்த நிலையில், குசால் மெண்டிஸ் – உபுல் தரங்கா ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இலங்கை 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்திருந்தது. மெண்டிஸ் 48 ரன், தரங்கா 22 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

நிடஹாஸ் டிராபி டி20 மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=383632http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |13 Mar 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *