நியாயமான விசாரணை இன்றி நாடாளுமன்றத்தால் கூட ஒருவரை கைது செய்ய அனுமதிக்க முடியாது : எஸ்சி, எஸ்டி சட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் விளக்கம்

,

புதுடெல்லி : எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் முக்கிய பிரிவுகளை உச்ச நீதிமன்றம் நீக்கியது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், யு.யு.லலித் அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘நாடாளுமன்றம்  இயற்றிய சட்டத்தை நீதிமன்றங்கள் மாற்ற முடியாது’’ என கூறி, உச்ச நீதிமன்றம் அளித்த பல தீர்ப்புக்களை எடுத்து கூறினார். அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: நியாயமான விசாரணை இல்லாமல் ஒருவரை கைது செய்ய நாடாளுமன்றத்தால் கூட அனுமதிக்க முடியாது. ஒருவரின் புகார் அடிப்படையில், ஒரு அப்பாவி கைது செய்ய அனுமதித்தால், நாம் நாகரீகமான சமூகத்தில் வாழ்வதில் அர்த்தமில்லை. நேரமின்மை காரணமாக இந்த வழக்கின் விவாதங்கள் முடியவில்லை. வழக்கின் அடுத்த விசாரணை கோடை விடுமுறைக்கு பின் நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

,

Advertisement