TODAY NEWS
Search

நிலத்தடி நீரை டிஎம்ஆர்சி உறிஞ்சும் விவகாரம் ஆலோசனை கூட்ட விவரங்களை தாக்கல் செய்ய ஏஏபி அரசுக்கு உத்தரவு

,

புதுடெல்லி: நிலத்தடி நீர் சட்டவிரோதமாக அனுமதியின்றி ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி  வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும்  குற்றம்சாட்டி டெல்லியில் வசித்து வரும் குஷ் கல்ரா என்பவர் தேசிய பசுமை  தீர்ப்பாயத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதுபற்றி அந்த  மனுவில் அவர் மேலும் தெரிவித்ததாவது: எந்தவொரு தனிநபராவது தங்களது  வீடுகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக குழாய் அமைத்து நிலத்தடி நீரை  உறிஞ்சினால், அதிகாரிகள் உடனடியாக அவற்றை அப்புறபடுத்துவதோடு அபராதமும்  விதிக்கின்றனர். ஆனால், ரயில்களை சுத்தம் செய்வதற்காக மெட்ரோ  நிறுகூனம்(டிஎம்ஆர்சி) அனுமதியின்றி போர்வெல் அமைத்து நீரை உறிஞ்சி  பயன்படுத்தி வருகிறது. இதுபோன்று டிஎம்ஆர்சி சுமார் 276 போர்வெல் குழாய்களை  அமைத்துள்ளது. இது அதிகாரிகளுக்கு தெரிந்தும் இதுவரை எந்தவித  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்  நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் விசாரித்து ஏற்னவே சில உத்தரவுகளையும் பிறபித்தது. இந்நிலையில், இந்த மனு நேற்று தீர்ப்பாய நீதிபதிகள் ரகுவேந்திரா எஸ் ரதோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தெற்கு டெல்லியை தவிர, பிற அனைத்து மாவட்டங்களிலும் இது தொடர்பாக ஆலோசை கூட்டங்கள் நடைபெற்றன. அதுபற்றிய  ஆவணங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும், தெற்கு டெல்லி மாவட்டத்தை பொறுத்தவரை ஏப்ரல் 20ம் தேதி நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். பிற மாவட்டங்களின் ஆலோசனை கூட்டங்கள்  பற்றிய விவரங்களை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, நீதிபதிகள், கூறுகையில், நிலத்தடி நீர் எடுப்பதற்கான அனுமதி வழங்குவது தொடர்பாக நடத்தப்படவுள்ள கூட்டங்களில் அனைத்த மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள், டிஎம்ஆர்சி, மற்றும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் ஆகியவற்றையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இதற்கான ஆலோசனை கூட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என கூறி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

,

Advertisement