TODAY NEWS
Search

நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக காங். வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு

,

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் மே 12ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் பாஜ முதல்கட்டமாக 72 வேட்பாளர் பெயர்கள் அடங்கிய பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி நிலவிவந்தது. இதற்கிடையில் டெல்லியில் தேர்தல் குழுவினர் நேற்று 218 பேர் அடங்கிய காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். இதில், முதல்வர் சித்தராமையா மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் யதீந்திரா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் கொரட்டகேர தொகுதியிலும், அம்பரீஷ் மண்டியா தொகுதியிலும், டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தற்போது அமைச்சர்களாக உள்ள அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் டிக்கெட் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

,

Advertisement