Dkn_Daily_News_May_2018__2992016077042

பல்கலை. டென்னிஸ்: சென்னை பல்கலைக்கழகம் சாம்பியன்

சென்னை: தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான  டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவில் சென்னைப் பல்கலைக்கழகமும், பெண்கள் பிரிவில் அண்ணா  பல்கலைக்கழகமும் சாம்பியன் பட்டம் வென்றன. எஸ்டிஏடி சார்பில் படூரில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த தொடரில் (மே 2-14), ஆண்கள் பிரிவில் 10 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றன. கடைசி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர், இரட்டையர் பைனலில் சென்னை பல்கலை. – எஸ்ஆர்எம் அணிகள் மோதின. இதில்  சென்னை பல்கலைக்கழகம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. முதல் பரிசாக 50 ஆயிரம், 2வது பரிசாக 37,500 மற்றும் 3வது இடம் பிடித்த அண்ணா பல்கலை. அணிக்கு 25,000 வழங்கப்பட்டது.  பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்கள் பிடித்த அணிகளிடையே லீக் முறையில் நடந்த பைனலில்  சென்னை பல்கலை., அண்ணா பல்கலை., எஸ்ஆர்எம் பல்கலை. அணிகள் தலா ஒருமுறை மோதின. 2 போட்டிகளில் வென்ற அண்ணா பல்கலை. சாம்பியன் பட்டம் வென்று முதல் பரிசாக 50 ஆயிரம் பெற்றது. 2ம் இடம் பிடித்த எஸ்ஆர்எம், 3வது இடம் பிடித்த சென்னை பல்கலை. அணிக்கு முறையே 37,500, 25,000 வழங்கப்பட்டது. முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரர் டி.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கோப்பைகளையும், பரிசுத் தொகையையும் வழங்கினார். இந்துஸ்தான் பல்கலை. பதிவாளர் பொன் ராமலிங்கம் தலைமை வகித்துப் பேசினார்.

பல்கலை. டென்னிஸ்: சென்னை பல்கலைக்கழகம் சாம்பியன்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402103http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |15 May 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *