பா.ஜனதா பாணியில் காங்கிரஸ் பதிலடி

,

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி அதிரடியாக களம் இறங்கி மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமியை தொடர்புக் கொண்டு பேசினர். குமாரசாமியை முதல்வராக்குவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று கூட்டணி ஆட்சி அமைக்க அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். கோவா, மேகாலயா. மணிப்பூர் போன்ற மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வென்றபோதிலும், பாஜ பிற கட்சி கூட்டணியோடு ஆட்சியமைத்தது. ஆனால் இம்முறை காங்கிரஸ் விழித்துக்கொண்டது. கர்நாடகாவில், பாஜ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்கும் என்று பா.ஜனதா காத்திருந்தது. ஆனால் ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து காங்கிரஸ் கூட்டணி அமைத்துக்கொண்டது. இதன் மூலம் பாஜ.வுக்கு அதன் பாணியிலேயே காங்கிரஸ் பதிலடி கொடுத்தது. அதன்பின் சுதாரித்த பாஜ உடனடியாக எடியூரப்பாவை அனுப்பி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.2004 தேர்தல் போல் கூட்டணிகர்நாடகாவில் 2004ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 79 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்த போதிலும், 65 இடங்கள் பிடித்த காங்கிரஸ், 58 இடங்கள் பிடித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. காங்கிரஸ் சார்பில் தரம்சிங் முதல்வரானார். அவர் ஒரு வருடம் 245 நாள் பதவியில் இருந்தார். அதன்பின் குமாரசாமி முதல்வரானார். அவர் 1 வருடம் 253 நாள் பதவியில் இருந்தார். அதன்பின் கூட்டணி குழப்பம் காரணமாக 2007 அக்டோபர் 9ல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போதும் 2004ம் ஆண்டு நடந்தது போல் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.

,

Advertisement