TODAY NEWS
Search
Dkn_Daily_News_2017_4926372766495

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவுடன் நேற்று மோதிய ஸ்ரீகாந்த் 21-14 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 21-14, 21-13 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டி வெறும் 35 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் அவர் வென்ற 4வது சூப்பர் சீரீஸ் பட்டம் இது. முன்னதாக அவர் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரீஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். தொடர்ச்சியாக 4வது சூப்பர் சீரீஸ் பட்டம் வென்றுள்ள அவர், ஆண்கள் ஒற்றையர் பிரிவு உலக தரவரிசையில் விரைவில் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. ஒரே சீசனில் 4 சூப்பர் சீரீஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. ஸ்ரீகாந்த் இதுவரை 6 சூப்பர் சீரீஸ் பட்டங்களை வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் தொடரில் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து ஏமாற்றமளித்த நிலையில், ஸ்ரீகாந்த் பட்டம் வென்றது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாதனை வீரர் ஸ்ரீகாந்த்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=346980http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |30 Oct 2017http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *