TODAY NEWS
Search
Dkn_Daily_News_June_2018__6806102991105

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : சிமோனா ஹாலெப் சாம்பியன்

பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் (10வது ரேங்க்) நேற்று மோதிய ஹாலெப் (ரோமானியா), 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டிலும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் கை ஓங்கிய நிலையில், கடுமையாகப் போராடி ஸ்டீபன்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த ஹாலெப் 6-4 என கைப்பற்றி சமநிலை ஏற்படுத்தினார். மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி ஸ்டீபன்சை திணறடித்த ஹாலெப் 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 2 மணி, 3 நிமிடம் போராடி வென்று முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் கோப்பையை முத்தமிட்டார். நம்பர் 1 வீராங்கனையாக இருந்தாலும், கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றதில்லை என்ற குறையை நேற்று அவர் நிவர்த்தி செய்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 10 முறை சாம்பியனான ரபேல் நடாலுடன் (ஸ்பெயின்), இளம் வீரர் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) மோதுகிறார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : சிமோனா ஹாலெப் சாம்பியன்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=409954http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |10 Jun 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *