TODAY NEWS
Search
Dkn_Daily_News_June_2018__8075176477433

பிரேசில் ஆதிக்கம்…

உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக பிரேசில் முன்னிலை வகிக்கிறது. அந்த அணி 5 முறை உலக  கோப்பையை முத்தமிட்டுள்ளது.* ஜெர்மனி, இத்தாலி அணிகள் தலா 4 முறை உலக சாம்பியனாகி உள்ளன.* அர்ஜென்டினா, உருகுவே அணிகள் தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளன.* ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தலா ஒரு முறை உலக கோப்பையை கைப்பற்றி உள்ளன.* பிரேசில் வீரர் ரொனால்டோ (15 கோல்), ஜெர்மனியின் ஜி.முல்லர் (14 கோல்) 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளனர்.* பிரான்ஸ் வீரர் ஜஸ்ட் போன்டைன் 1958ல் நடந்த தொடரில் 6 ஆட்டங்களில் களமிறங்கி 13 கோல் போட்டி மிரட்டியுள்ளார். * பிரேசில் நட்சத்திரம் பீலே 12, கோக்சிஸ் (ஹங்கேரி), கிளின்ஸ்மேன் (ஜெர்மனி) தலா 11 கோல் அடித்துள்ளனர்.* ஜெர்மனியின் தாமஸ் முல்லர் உட்பட 5 வீரர்கள் தலா 10 கோல் அடித்துள்ளனர்.*  ரஷ்ய தொடரில் களமிறங்கும் வீரர்களில் தாமஸ் முல்லர் மட்டுமே  அதிகபட்ச கோல் (10) அடித்த வீரர் ஆவார். * ரோட்ரிகியூஸ் (6), மெஸ்ஸி, சுவாரெஸ், காஹில், ஹிகுவைன் தலா 5 கோல் அடித்துள்ளனர். * நெய்மர், ஷகிரி தலா 4 கோல் அடித்துள்ள நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட 4 வீரர்கள்  தலா 3 கோல் போட்டுள்ளனர்.

பிரேசில் ஆதிக்கம்…http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410192http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |11 Jun 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *