TODAY NEWS
Search

பெண்களைவிட அதிகளவில் பிஎச்டி படிக்கும் ஆண்கள் : மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல்

,

புதுடெல்லி :நாட்டில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகளவில் முனைவர் பட்டத்துக்கு (பிஎச்டி) படிப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 2014-15 கல்வியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக் கழகங்களில் ஒரு லட்சத்து 792 மாணவர்கள் பிஎச்டி பயில சேர்ந்தனர். கடந்த 2015-16 மற்றும் 2016-17 கல்வி ஆண்டுகளில் முறையே ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 552 பேரும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 712 பேரும் பிஎச்டி படிக்க பல்கலை கழகங்களில் சேர்ந்துள்ளனர்.மாணவிகளை காட்டிலும் கடந்த 2014-15 கல்வியாண்டில் 21 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக பிஎச்டி.யில் சேர்ந்துள்ளனர். இதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் 21 ஆயிரத்து 688, 21 ஆயிரத்த 882 மாணவர்கள் கூடுதலாக பிஎச்டி படிப்பில் இணைந்துள்ளனர். மத்திய பல்கலை கழகங்களை விட மாநில பல்கலைக் கழகங்களில் அதிக அளவிலான மாணவர்கள் பிஎச்டி படிக்கின்றனர். 2016-17ம் கல்வியாண்டில், 41 ஆயிரத்து 566 மாணவர்கள் மாநில அரசு பல்கலைக் கழகங்களில் பிஎச்டி படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 26 ஆயிரத்து 12 மாணவர்கள் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் சேர்ந்துள்ளனர். இதேபோல், மத்திய பல்கலைக் கழகங்களில் 17,715 மாணவர்களும், தனியார் பல்கலைக் கழகங்களில் 16,595 மாணவர்களும் இப்படிப்பில் சேர்ந்துள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

,

Advertisement