TODAY NEWS
Search
Dkn_Daily_News_June_2018__5459057092667

பைனலில் இந்தியா அதிர்ச்சி தோல்வி ஆசிய கோப்பையை அபகரித்தது வங்கதேசம்: கடைசி பந்தில் த்ரில் வெற்றி

கோலாலம்பூர்: இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில், கடைசி பந்தில் வெற்றியை வசப்படுத்திய வங்கதேச மகளிர் அணி முதல் முறையாக  ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற மகளிர் ஆசிய கோப்பை டி20  தொடர், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. லீக் சுற்றின் முடிவில் தலா 8 புள்ளிகளுடன் முதல் 2  இடங்களைப் பிடித்த இந்தியா, வங்கதேசம் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. கின்ராரா அகடமி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த பைனலில் நடப்பு சாம்பியன் இந்தியா – வங்கதேசம் மோதின. ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய  அணியை வீழ்த்தியிருந்ததால், வங்கதேச வீராங்கனைகள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்கினர். டாசில் வென்ற வங்கதேசம் முதலிப் பந்துவீசிய  நிலையில், இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்தது. கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் மட்டும் உறுதியுடன் விளையாடி அரை சதம்  அடிக்க, மித்தாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி தலா 11, ஜுலன் கோஸ்வாமி 10 ரன் எடுத்தனர். ஹர்மான்பிரீத் அதிகபட்சமாக 56 ரன் (42 பந்து, 7  பவுண்டரி) விளாசினார்.மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். ஏக்தா பிஷ்ட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.  வங்கதேச பந்துவீச்சில் ருமானா, கதீஜா தலா 2, சல்மா, ஜகானாரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 113 ரன் எடுத்தால்  வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. முதல் 4 வீராங்கனைகள் ஷமிமா 16, அயஷா 17, பர்கானா 11, நிகர் சுல்தானா 27 ரன் எடுத்து  பூனம் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, பரபரப்பான கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. கவுர் வீசிய அந்த ஓவரின் முதல்  பந்தில் சஞ்ஜிதா 1 ரன் எடுக்க, 2வது பந்தை ருமானா பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்த பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 4வது பந்தில் சஞ்ஜிதா, 5வது  பந்தில் ருமானா (23 ரன்) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு வெற்றி நம்பிக்கை பிறந்தது. எனினும், கடைசி பந்தை எதிர்கொண்ட ஜகானாரா ஆலம் பதற்றமின்றி 2 ரன் எடுத்து, இந்திய அணியிடம் இருந்து வெற்றியை தட்டிப் பறித்தார்.  வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்து வென்று முதல் முறையாக ஆசிய கோப்பையை முத்தமிட்டது. ஆறு முறை  சாம்பியனான இந்தியா இம்முறை 2வது இடத்துடன் திருப்தியடைந்தது. இந்திய பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பூனம் யாதவ் 4 ஓவரில் 9  ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். கவுர் 2 விக்கெட் எடுத்தார். இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக வங்கதேசத்தின்  ருமானா அகமதுவும், தொடரின் சிறந்த வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ஹர்மான்பிரீத் கவுரும் விருது பெற்றனர்.

பைனலில் இந்தியா அதிர்ச்சி தோல்வி ஆசிய கோப்பையை அபகரித்தது வங்கதேசம்: கடைசி பந்தில் த்ரில் வெற்றிhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410191http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |11 Jun 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *